Tuesday, April 6, 2010

இரும்பு

உன் குழலசைவில் விழலாகாதென்று கண்மூடினேன்
- நான் அதனின்று உதிர்ந்த மலரென்று அறியாமல்
உன் நகப்பூச்சில் விழலாகாதென்று முகம் திருப்பினேன்
- அதில் ஒட்டிய தூசி நானென்பதை அறியாமல்
உன் நகையோசையில் விழலாகாதென்று செவி மூடினேன்
- அதன் ஒலித்துண்டு நானென்பதை அறியாமல்
உன் காலடியில் விழலாகாதென்று மனமிறுக்கினேன்
- உன் பாதணி நானென்பதை அறியாமல்
உன் விழிவலையில் விழலாகாதென்று இரும்பானேன்
- அது காந்த வலையென்று அறியாமல்

3 comments:

  1. nandi : thiru muthuselvan, for pointing out a correction in the 4th verse.

    ReplyDelete
  2. thirutham - it should have been "nandri" - instead of "nandi" in my previous comment. Sorry muthu

    ReplyDelete